
திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதற்காக இரண்டு நாள் பயணமாக சென்னை அமித்ஷாவந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாரிசு அரசியலை பாஜக ஒழிக்கும் என திமுகவை குறிப்பிட்டு பேசியுள்ளதற்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
கண்ணாடியைப் பார்த்து கரடி பொம்மை என்ன விலை என்று கேட்ட நகைச்சுவை போல் உள்ளது அவர் பேசியது என ஸ்டாலின் கூறியுள்ளார்.
எத்தனை வித்தைகள் செய்தாலும் 2021 தேர்தலில் மக்கள் பலமான அடியை வழங்குவார்கள் என்றும் திமுக தலைவர் தெரிவித்துள்ளார்
மேலும் அரசு கஜானாவை சுரண்டிய இரட்டையர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகள் மீது ஊழல் புகார் கூறுவது சரியா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.