
தமிழக சட்டசபைத் தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணி தொடரும் என தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்ட அரச விழாவில் அவரை வரவேற்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் நினைவுப்பரிசை வழங்கிவைத்தனர்.
இவ்விழாவில் பேசிய பன்னீர் செல்வம், இனிவரும் தேர்தல்களில் அதிமுக- பாஜக கூட்டணி தொடரும். 2021 சட்டமன்ற தேர்தலில் 3ஆவது முறையாக வெற்றிபெறுவோம்” என்றார்.
“அமித் ஷா சிறந்த நிர்வாகி. ஜெயலலிதா வழியில் அதிமுக அரசு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.
மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதில் இந்தியாவில் அதிமுக அரசு முதலிடத்தில் உள்ளது.
அதிமுகவிற்கு மக்கள் செல்வாக்கு நாளாந்தம் அதிகரிப்பதை பார்த்து எதிர்க்கட்சியினர் குமுறுகின்றனர், பதைபதைக்கின்றனர்.
தேசிய அளவில் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல பிரதமர் மோடி ஆற்றலுடன் செயல்பட்டு வளர்க்கிறார்.
இனி வரும் தேர்தலிலும் பாஜக – அதிமுக கூட்டணி தொடரும். தமிழகத்தின் முக்கிய நதிநீர் இணைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி தர வேண்டும்” என்றும் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.