ஒன்லைன் ரம்மி போன்ற இணைய வழி சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கிறார்.
ரம்மி விளையாட்டால் இளைஞர்கள் பணத்தையும் வாழ்க்கையையும் இழக்கும் அவல நிலையை போக்கவே இந்த தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அண்மையில் இணையவழி சூதாட்டத்தில் ஈடுபட்டு தோல்வியுற்றதால் சில இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து இந்த அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
தடையை மீறி இணையவழி சூதாட்டங்களில் ஈடுபடுவோருக்கும், அவற்றை நடத்துவோருக்கும் கடும் தண்டணை வழங்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையை மீறி ஒன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடுவோருக்கு 5,000 ரூபாய் அபராதமும், ஆறு மாத சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்லைன் ரம்மி போன்ற இணையவழி சூதாட்ட நிறுவனங்களை நடத்துவோருக்கு பத்தாயிரம் ரூபா அபராதமும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரித்திருக்கிறது .