April 18, 2025 9:50:48

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தேர்தல் பணிகளை தொடங்குங்கள்’: ஈபிஎஸ்- ஓபிஎஸ் தொண்டர்களுக்கு அழைப்பு

தேர்தல் பணிகளை இன்றே தொடங்குங்கள் என்று ஆளும் அதிமுக கட்சியின் தலைவர்களான எடப்பாடி பழனிச்சாமியும் ஓ. பன்னீர் செல்வமும் தங்களின் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

நாளை அதிமுகவின் 49 ஆவது ஆண்டு தொடக்க விழா நிகழ்வுகள் ஆரம்பமாவது குறித்து கட்சித் தொண்டர்களுக்கு கூட்டாக எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் பன்னீர் செல்வமும் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

‘2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தல் வெற்றிப் பணிகளை இன்றே தொடங்குவோம். அதிமுகவின் பொன்விழா ஆண்டில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் மகத்தான சாதனையைப் படைப்போம். பொன்விழாவை நோக்கி புதுப்பயணம் தொடங்குவோம்” என்று அவர்கள் கூறியுள்ளனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை திமுக ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில் அதிமுகவும் தற்போது தொடங்கியுள்ளதால் தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது

அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டுள்ளதும் அதற்கு துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆதரவு வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.