May 20, 2025 3:44:32

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நிவர்’ தாக்கத்தால் தமிழகத்தில் பலத்த சேதங்கள்

நிவர் புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நிவர் புயல் புதுச்சேரி, மரக்காணம் அருகே கரையை கடந்துள்ளதோடு, மரக்காணம் பகுதியில் பலத்த பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, வேலூர், காஞ்சிபுரம் உட்பட பல மாவட்டங்களிலும் நிவர் புயல் பலத்த சேதங்களை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வட மாவட்டங்கள் பலவற்றிலும் புயல் காரணமாக மரங்கள் சரிந்து விழுந்துள்ளதோடு, சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மக்கள் குடியிருப்புகளுக்கும் குடிசைகளுக்கும் சேதமேற்பட்டுள்ளதோடு, வீதிப் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.

சென்னையில் பல இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கின்றதோடு, உயிரிழப்புகள் எதுவும் இதுவரை பதிவாகியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.