தென் சீனக் கடல் பகுதியில் நடைபெறும் சீனாவின் அதிகார அத்துமீறல்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் குறித்து கிழக்காசிய மாநாட்டில் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றிய இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது கவலையை பதிவு செய்துள்ளார்.
சீனாவின் கடல் ஆக்கிரமிப்பினால் ஏனைய நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த மாநாட்டில் சர்வதேச கடல் எல்லைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை வகுத்த வரைமுறைகளை மீறக் கூடாது என்றும் இந்தியா சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சீனாவின் பிரதமர் முன்னிலையில் அதன் கடல்சார் ஆக்கிரமிப்பை இந்தியா இந்த மாநாட்டில் சுட்டிக்காட்டியுள்ளது.
கிழக்காசிய மாநாட்டில் சீனா உட்பட 10 கிழக்காசிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.