May 8, 2025 20:10:50

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மனசெல்லாம் இ.பி.எஸ்- மக்களுக்காக இ.பி.எஸ்’; அதிமுகவின் பிரசாரம் ஆரம்பம்

தமிழக சட்டசபை தேர்தலை இலக்காக வைத்து ஆளும் அதிமுகவின் தகவல் தொடர்பு பிரிவு தனது பிரசாரத்தை ஆரம்பித்துள்ளது.

அதிமுகவின் முதல் அமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமியை இலக்காக வைத்து ‘மனசெல்லாம் இபிஎஸ் மக்களுக்காக இ.பி.எஸ்’ என்ற பிரசாரத்தை அதிமுகவின் தகவல் தொடர்பு பிரிவு ஆரம்பித்துள்ளது.

முதல்கட்டமாக ஐந்து வாரங்களுக்கு இணையம் மூலம் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுப்பதற்கு அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தீர்மானித்துள்ளது.

ஒவ்வொரு வாரமும் ஒரு கருத்தை மக்களிடம் கொண்டுசெல்வதற்கும் அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தீர்மானித்துள்ளது.

அதிமுக அரசின் சாதனைகள், எடப்பாடி பழனிச்சாமியின் தலைமைத்துவம், அவரால் மக்களுக்கு செய்யப்பட்ட சேவைகள் போன்றவற்றை மக்களிடம் கொண்டு செல்வதே இதன் நோக்கம்.

இந்த பிரசார உத்திகள் மூலம் மக்களின் மனதில் இடம்பிடிக்க முடியும் என அதிமுக நிர்வாகிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.