January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பிறந்த நாள் விருந்து

இன்றைய தினம் பிறந்தநாளை கொண்டாடும் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் காதலரான விக்னேஷ் சிவன் நயன்தாரா தற்போது நடித்து வரும் நெற்றிக்கண் படம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார்.

தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் மனதில் கனவு நாயகியாக நிறைந்திருக்கும் நயன்தாரா,சுமார் 15 வருடங்களாக தனது யதார்த்தமான நடிப்பால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தட்டிச் சென்றவர்..

முன்னணி ஹீரோக்களின் படம் என்றாலே நயன்தாராவின் தரிசனம் இல்லாமல் இருக்காது.நயன்தாரா சமீபகாலமாக நடித்து வரும் படங்களை பார்த்தோமென்றால் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களை மட்டுமே அவர் தேர்வு செய்வதை நாம் காணமுடிகிறது.

நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு நெற்றிக்கண் படத்தின் டீசரை சரியாக காலை 9.9 மணிக்கு வெளியிடவுள்ளதாக நயன்தாராவின் காதலரும் படத்தின் இயக்குனருமான விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார் .

இதில் நயன்,ஒன்பது ,ஒன்பது எல்லாம் அவரின் பெயருடன் ஒத்துப்போவதை நாம் காணலாம். இந்தப் படத்தில் முதன்முறையாக பார்வையற்றவராக நயன்தாரா நடித்துள்ளதால் ரசிகர்களிடையே படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இன்று தனது 36 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நயன்தாராவிற்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன .மலையாள தேசத்தைச் சேர்ந்தவரான நடிகை நயன்தாரா தமிழில் சரத்குமாருடன் ஐயா படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.

நடிகர் ரஜினி ,விஜய் ,அஜித் ,சூர்யா ,ஆர்யா ,ஜெயம்ரவி ,விஜய் சேதுபதி ,தனுஷ் ,சிம்பு , ஜெய் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து தமிழ் சினிமாவில் வெற்றிக் கொடி நாட்டிய இவர்,
தமிழ் திரையுலகில் க்யூட்டான காதல் ஜோடிகள் என அழைக்கப்படும் நயன்தாரா ,விக்னேஷ் சிவன் இருவரும் ஒன்றாக பயணிப்பது ,ஒன்றாகவே வேலை பார்ப்பது என எங்கு சென்றாலும் அவர்கள் கலந்து கொள்ளும் புகைப்படங்கள் உலக அளவில் வைரலாகின்றன.

இந்நிலையில் இந்த பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கமே என ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

முக்கியமாக ஆணாதிக்கம் நிறைந்த சினிமாத்துறையில் தனக்கென்று ஒரு முக்கிய இடத்தைப் பிடிப்பது இலகுவான விடயமல்ல. இதனை நயன்தாரா ஒரு பெண்ணாக இருந்து சாதித்து விட்டார் என்றே கூறலாம்.

முன்னணி இயக்குனர்கள் தன் கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் படி வளர்ந்திருக்கிறார் நயன்தாரா .

நடிகை நயன்தாராவின் 36 வது பிறந்தநாளுக்கான டிபியை அவரது காதலர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

ஒரு நடிகை பத்து வருடங்கள் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து விட்டால் அது மிகப் பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது . நயன்தாரா சுமார் 15 வருடங்களாக முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பது ஆச்சரியமே?

சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்குபவர் தான் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா .

டோரா ,அறம்,ஐரா,கோலமாவு கோகிலா ,கொலையுதிர் காலம் மற்றும் தற்போது அவர் நடித்துக்கொண்டிருக்கும் நெற்றிக்கண் என ஏராளமான படங்களை நாம் உதாரணமாகக் கூறலாம்

தற்போது இவர் நடித்து வரும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படத்தில் முதன்முறையாக மூன்று வேடங்களில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த படம் நயன்தாராவின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சஸ்பென்சாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது .

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக விளங்கும் நயன்தாராவின் இந்த பிறந்தநாள் மூக்குத்தி அம்மனுடன் வெற்றிப் பயணமாகவே தொடங்கியுள்ளது.