
தென்னிந்தியாவில் பில்லியன் கணக்கான பார்வையாளர்களைப் பெற்ற முதல் பாடல் என்ற பெருமையை ரௌடி பேபி பாடல் பெற்றுள்ளது.
நடிகர் தனுஷ்,சாய் பல்லவி நடிப்பில் வெளியான ரௌடி பேபி பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.பட்டி தொட்டி எங்கும் ரௌடி பேபி பாடல் இல்லாத நிகழ்வுகள் இல்லை என்றே கூறலாம்.
யுவன் சங்கர் ராஜாவின் துள்ளலான இசையில் உருவான இந்த ரௌடி பேபி பாடல் யூடியூபில் அமோக வரவேற்பைப் பெற்றது.
பிரபுதேவாவின் அசத்தலான நடன வடிவமைப்புக்கு தனுஷ்,சாய்பல்லவி இருவரும் கச்சிதமான நடனத்தை வழங்கியிருந்தனர் .
கலக்கலான நடனத்திற்கும் துள்ளலான இசைக்கும் பரிசாக பில்லியன் கணக்கான பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது ரௌடி பேபி.
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் 2018ஆம் ஆண்டு வெளியான மாரி 2 படத்தின் பாடல்கள் யூடியூபில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றன.
அந்தவகையில் ரௌடி பேபி பாடல் யூடியூபில் ஒரு பில்லியன் பார்வையாளர்களை கடந்து தென்னிந்திய திரையுலகில் முதன்முதலில் இந்த சாதனையை படைத்துள்ளது.
இந்நிலையில் நடிகர் தனுஷ் ரௌடி பேபி பாடலின் சாதனையை டுவிட்டரில் பதிவிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
What a sweet coincidence this is
Rowdy baby hits 1 billion views on same day of the 9th anniversary of Kolaveri di. We are honoured that this is the first South Indian song to reach 1 billion views. Our whole team thanks you from the heart
— Dhanush (@dhanushkraja) November 16, 2020