
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்குச் சென்றுள்ளார் .
அவர் தற்போது தொகுப்பாளராக புது அவதாரம் எடுத்துள்ளார்.
இந்த தொகுப்பாளர் பணிக்காக கோடிகளில் சம்பளம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.பானா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகை சமந்தா,இதன் பின்னர் நான் ஈ,கத்தி ,24,தெறி உள்ளிட்ட படங்கள் மூலம் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தெலுங்கு திரையுலகிலும் தற்போது வரை தனது சிறந்த நடிப்பினால் முன்னணி நடிகைகளில் ஒருவராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.
தற்போது நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் தொகுப்பாளினியாக அவதாரம் எடுத்திருக்கிறார் நடிகை சமந்தா.தெலுங்கில் ஒளிபரப்பாக இருக்கும் சாம் ஜாம் என்னும் உரையாடல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் சமந்தா.
இந்த நிகழ்ச்சியின் பத்து எபிசோடுகளை தொகுத்து வழங்குவதற்கு ஒன்றரை கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாம் ஜாம் நிகழ்ச்சியின் முதல் விருந்தினராக தற்போது திரையுலகில் கனவு நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் தேவரகொண்டா கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்.