
முக்கியமாக நான்கு கதைகளை இணைத்து இந்த அந்தாலஜி உருவாக்கப்படுகிறது.
இந்த அந்தாலஜி படத்திற்கு ‘விக்டிம்’ என படக்குழுவினர் பெயரிட்டிருக்கிறார்கள்.
அமலாபால் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களை நடித்து வருகிறார். குறிப்பாக ‘ஆடை’ படம் அவருக்கு பெரிய வெற்றியைத் தேடித் தந்தது.
ஆகவே இந்த ‘விக்டிம்’ படமும் அமலாபாலுக்கு சினிமாத் துறையில் ஒரு பெரிய திருப்பு முனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக்சஸ் பிலிம் பேக்டரி மற்றும் பிளாக் டிக்கெட் கம்பெனி இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றனர்.
பொதுவாக ஒரு படத்தை ஒரு இயக்குனர் அல்லது இரு இயக்குனர்கள் தான் இயக்குவார்கள்.
ஆனால் இந்த அந்தாலஜி படத்தை இயக்குனர் சிம்புதேவன், ராஜேஸ், பா.ரஞ்சித் மற்றும் வெங்கட் பிரபு ஆகிய நான்கு இயக்குனர்கள் இயக்குகின்றனர்.