ஒரு கையில் கிரிக்கெட் துடுப்பாட்ட மட்டை மற்றொரு கையில் சொடக்கு போட்டு கொண்டு என செம மாஸாக வெளிவந்துள்ளது ஈஸ்வரன் திரைப்படத்தின் டீஸர்.
ரசிக்க வைக்கும் பல கமர்ஷியல் வசனங்களுடன் காட்சிக்கு காட்சி குதூகலமாக ,சென்டிமென்ட் என சிம்பு கையில் வேலுடன் நெற்றியில் அம்சமாக திருநீறு பூசிக்கொண்டு காட்சிகளில் வந்து செல்வது கவனத்தை ஈர்த்துள்ளது
பாரதிராஜாவுடன் சிம்பு இருக்கும் காட்சிகள் மற்றும் ஆக்ரோஷமான சில காட்சிகள் என ஒரு சூப்பர்ஹிட் திரைப்படத்துக்கான அனைத்து அம்சங்களும் கொண்டதாக அமைந்துள்ளது ஈஸ்வரன் டீஸர்.
கலக்கலான கமர்ஷியல் காட்சிகளுடன் கலகலப்பான பழைய சிம்புவை கண்முன் கொண்டு வந்து நிறுத்தி தீபாவளியில் இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார் படத்தின் இயக்குனர் சுசீந்திரன்.
ஒரு கிராமத்து பின்னணியில் உருவாகியிருக்கும் ஈஸ்வரன் படத்தின் டீசரை பார்க்கும்போது பெரும்பாலும் கிராம கதையை பின்னணியாக வைத்து படம் நகர்வதை காணமுடிகிறது.
தீபாவளி ஸ்பெஷல் பரிசாக வெளியிடப்பட்ட இந்த ஈஸ்வரன் பட டீசர் சிம்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது என்றே கூறலாம்.
தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த டீசர் வைரலாகி வருகிறது .
சமீப காலமாகவே திரைப்படங்களில் கவனம் செலுத்தாத சிம்புவை மீண்டும் பழையபடி திரைப்படங்களில் பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாகவே இந்த ஈஸ்வரன் டீஸர் அமைந்துள்ளது.