January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

போலிச் சாமியார்களை தோலுரிக்கும் ‘மூக்குத்தி அம்மன்’

கிராமப்புறங்களை எடுத்துக்கொண்டால் அங்கு குலதெய்வ வழிபாடு என்பது முக்கியமானதாக இருக்கும்.குலதெய்வத்தை வணங்கிய பின்னரே அவர்கள் தங்களுடைய முக்கிய வேலைகளையே தொடங்குவார்கள் .

அந்த வகையில் ‘மூக்குத்தி அம்மன்’திரைப்பட கதையும் அவ்வாறே தொடங்குகிறது.

நாகர்கோவிலில் செய்தியாளராக இருக்கும் ஆர்ஜே பாலாஜி அங்கு 11 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கட்ட உள்ள ஆசிரமம் குறித்த செய்திகளை சேகரிக்க செல்கிறார். அங்கு ஆரம்பிக்கிறது இந்த படத்தின் முக்கியமான கட்டங்கள்

ஒரு பக்கம் அம்மா, 3 தங்கைகளுடன் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறது ஆர்ஜே பாலாஜியின் குடும்பம். குலதெய்வ கோவிலுக்கு சென்று ஒருநாள் தங்கி வணங்கினால் கஷ்டங்கள் தீரும் என்று கூறவே, குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு சென்று அங்கு தங்குகிறார்கள். அப்போதுதான் இரவில் மூக்குத்தி அம்மன் அவருக்கு காட்சி கொடுக்கிறார்.

இதன்பின்னர் ஆர்ஜே பாலாஜி உடன் மூக்குத்தி அம்மன் பயணிக்க தொடங்குகிறார்.நில ஆக்கிரமிப்பை அம்பலப்படுத்துவது ,
சாமியார்களுக்கு சாட்டையடி கொடுப்பது என கதை நகர்கிறது.

கஷ்டங்களை நினைத்து வருந்துவதும் ,கடவுள் வரம் கொடுத்தவுடன் குதூகலிப்பதும், போலிச்சாமியார்களிடம் சண்டையிடுவது என கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் ஆர்ஜே பாலாஜி.

நயன்தாரா மூக்குத்தி அம்மனுக்கு பொருத்தமான தேர்வு என்று தான் சொல்ல வேண்டும் .

கடவுள் என்பது யார் , போலிச்சாமியார்கள் கடவுள் பெயரை வைத்து என்ன செய்கிறார்கள் ,மக்கள் அதனை எப்படி பார்க்க வேண்டும் என மூக்குத்தி அம்மன் பேசியிருக்கும் வசனங்கள் அனைத்துமே சாட்டையடியாக இருக்கின்றன.

படத்தில் ஆர்ஜே பாலாஜியின் அம்மாவாக ஊர்வசி நடித்து இருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. நகைச்சுவையாக அவரது கதாபாத்திரம் நகர்வது படத்திற்கு மிகப்பெரிய பலம் என்றே கூறலாம்.

போலி சாமியாராக நடித்துள்ள அஜய் கோஸ், மவுலி ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்டோரின் கதாபாத்திரங்களும் பொருத்தமான தேர்வு.

கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட அழுத்தத்திற்கு மருந்தாக, தீபாவளி நாளில் ஒரு கலகலப்பான படமாக மூக்குத்தி அம்மன் படம் அமைந்தது என்று கூறலாம்.