July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ போஸ்டர் வெளியானது

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்கும் சிவகார்த்திகேயன்,இறுதியாக நடித்து வெளிவந்த ஹீரோ படம் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து அவர் இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் அயலான் படத்தில் நடித்து வருகிறார் .

தற்போது நெருங்கிய நண்பரும் கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனருமான நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் டாக்டர் படத்தில் நடித்து வருகிறார்.இதன் போஸ்டர்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.

இந்த திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கிறார். இந்த படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்சன்ஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இந்தப் படத்தில் யோகிபாபு,வினய், டோனி,அர்ச்சனா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இதனால் இந்தப் படத்தில் நவரசத்திற்கு பஞ்சம் இருக்காது என்று நம்பலாம்.

தெலுங்கில் கடந்த வருடம் வெளிவந்த கேங் லீடர் படத்தின் மூலம் அறிமுகமான பிரியங்கா மோகன் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் .இவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இதுவாகும் .
டாக்டர் படத்திலிருந்து சில புகைப்படங்களை படக்குழுவினர் தற்போது வெளியிட்டு இருக்கின்றனர் .இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன .

இந்த படத்தில் சிவகார்த்திகேயன் எழுதிய செல்லம்மா என்ற பாடல் கடந்த ஜூலை 16ஆம் திகதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது .