November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“மாஸ்டர்” பட டீசரை கொண்டாடும் தளபதி ரசிகர்கள்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகி தற்போது வைரலாகியுள்ளது.

டீசர் வெளியாகி 8 மணி நேரத்திற்குள் பார்வையாளர்களின் பக்கத்தில் ஒரு கோடியை தாண்டியது. விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த மாஸ் கிடைத்து விட்டது என்றே எண்ணத்தோன்றுகின்றது.

ஜேடி என்கின்ற கல்லூரி பேராசிரியராக நடிக்கும் விஜய் அந்த கல்லூரியில் நடக்கும் ஒரு சில விடயங்களை எதிர்க்கிறார். அதற்கு காரணம் விஜய் சேதுபதிதான் என்பதும் இந்த டீசரை பார்க்கும்போது தெரிகிறது.

இதில் ஹீரோயின் மாளவிகா மோகனனை நாம் ஆங்காங்கே காணமுடிகிறது. கூட்டத்தில் சாந்தனு மற்றும் சிலரை நாம் அடையாளம் காண முடிகிறது.

மாஸ் ஹீரோக்களை வைத்து படம் தயாரிக்கும் போது அவர்களது ரசிகர்களின் ரசனையை அறிந்து படம் எடுப்பவர் தான் மாஸ் இயக்குனராகவும் இருக்க முடியும் என்பது எல்லோரதும் கருத்து. அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் சரியாக செய்திருப்பார் என எண்ணத் தோன்றுகிறது.

கடந்த 7 மாதங்களுக்கு மேலாக விஜய் ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர்.

டீசர் வெளியாவதற்கு முன்பே #mastarteaser என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்டாக்கி கொண்டாடி வருகின்றனர்.

இந்தப் படத்தைப் பார்க்கும் வாய்ப்பு எப்போது கிடைக்கும் என ஏங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு தீபாவளியையொட்டி டீசர் வெளியிட்டிருப்பது ஆறுதலையும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது .

இந்தப் படத்தில் விஜய்சேதுபதி மிரட்டலாக வருகிறார். ஆட்டம் பாட்டம் ஆக்ஷன் என பட்டையை கிளப்பும் மாஸ்டர் டீசரில் விஜய் சேதுபதியும் ,விஜயும் நேருக்கு நேராக மோதும் காட்சிகள் விஜய் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் என எதிர்பார்க்கலாம்.

டீசரை பார்க்க இத்தனை நாட்களாக காத்திருந்தது வீண் போகவில்லை என விஜய் ரசிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

மாஸ்டர் படத்தை ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தார்கள் ஆனால் மார்ச் மாதமே கொரோனா வைரஸ் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததால் ரிலீஸ் திகதி தள்ளிப்போனது.

திரயரங்குகள் கடந்த 10ஆம் தேதி திறக்கப்பட்ட போதிலும் மாஸ்டரை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முடியவில்லை.

இருந்தபோதிலும் மாஸ்டர் படத்தை அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.