January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மீண்டும் திரையில் ஸ்ரேயா சரண்

நீண்ட இடைவெளியின் பின்னர் மீண்டும் களத்தில் இறங்கியிருக்கிறார் ஸ்ரேயா சரண் .

தனது யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த ஸ்ரேயா தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிப்படங்களில் கொடி கட்டி பறந்தவர்.

தனது திருமண வாழ்க்கைக்கு பின்னர் மீண்டும் புதியதொரு ஆரம்பத்தை அவர் தொடங்கியிருக்கிறார் .அந்த திரைப்படத்தின் பெயர் தான் கமனம்.இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது .

நிஜ வாழ்வின் யதார்த்த நிகழ்வுகளைக் கொண்ட கதையாக அமைந்துள்ள கமனம் படம்,அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையிலும் அவர்களின் இலட்சியங்களும் கனவுகளும் எவ்வாறான தடைகளுக்குப் பின்பு நிறைவேறுகிறது என்பதையும், வாழ்க்கையில் சந்திக்கும் பல்வேறு இன்னல்களிலிருந்து மீள்வது என பல்வேறு கதைகளை கொண்ட ஒரு சிறப்பான தரம்வாய்ந்த திரைப்படமாக இதனை நாம் காணமுடிகிறது.

அடித்தட்டு குடும்பத்தில் ஒரு குழந்தைக்கு தாயாக எதிர்நோக்கும் பல பிரச்சனைகளை சொல்லும் இந்தப் படம் ஸ்ரேயாவுக்கு சினிமாவில் அடுத்த மைல்கல் என்றே சொல்லவேண்டும்.இதில் குறிப்பாக முன்னணி கதாநாயகி நித்யா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் .

இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இதனால் இந்த படத்தின் பாடல்கள் மிகப் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமனம் படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்து விட்ட நிலையில் இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.