January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழகத்தை தாக்கும் கேரளத்து புயல்; மாளவிகா மோகனன்

கேரளத்தில் உருவாகி  மும்பையில் நிலைகொண்டு தமிழ்நாட்டைத் தாக்கும் மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன்.

இவரின் முதல் படமே துல்கர் சல்மானுடன் மலையாளத்தில் ‘பட்டம் போல்’.

இவர் பிறந்தது கேரளாவிலுள்ள கண்ணூர் மாவட்டம் என்றாலும் வளர்ந்ததெல்லாம் மும்பையில்தான்.

மாளவிகா மலையாள படத்தை தொடர்ந்து ஹிந்தியில் ஒரு படம், கன்னடத்தில் ஒரு படம், தமிழில் சூப்பர் ஸ்டாருடன் பேட்டை,தெலுங்கில் ஒரு படம் என ரவுண்டு கட்டி ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு படமா நடிச்சிட்டு இருக்காங்க.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை இளையதளபதி விஜய் கூட ஒரு படம் நடிச்சா போதும் விஜய் ரசிகர்கள் அவரை தலையில் வைத்து கொண்டாடுவார்கள்.

அந்த வகையில மாஸ்டர் படத்துக்கு பிறகு இவங்களால வேற மாநிலத்திற்கோ இல்ல வேற மொழி படத்திற்கோ போய் நடிக்க முடியாத அளவுக்கு தமிழில கமிட் ஆகிடுவாங்க.

இப்பவே நிறைய தமிழ் படங்களில் நடிப்பதற்கு பேசப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கு.

என்னதான் முதலில் ஆரவாரம் மிகுந்து காணப்பட்டாலும் காலப் போக்கில் தமிழ் சினிமாவில் காணாமல் போன நடிகைகளும் உண்டு.

எது எப்படியோ தமிழ்நாட்டுக்கு கேரளாவிலிருந்து அடுத்த ஒரு ஹீரோயின் ரெடி.