January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நடிகர் விஜயின் கடந்தகாலம் குறித்து எழுத்தாளர் கலைமணி அளித்துள்ள பேட்டி

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா, வரமாட்டாரா என்ற குழப்பத்தில் அவருடைய ரசிகர்கள் ஆழ்ந்துள்ளனர். ஏனென்றால் தனது மகன் அரசியலில் ஈடுபடுவார் என்று அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஆணித்தரமாக கூறியதை தளபதி விஜய் பகிரங்கமாக மறுத்துவிட்டார்.

அதன்பின் இவர்களுக்கிடையே ஏற்பட்ட சலசலப்பு சமூக வலைத்தளங்களில் சினிமா பிரபலங்கள் பலரால் அதிகம் பேசப்பட்டு வருகிறது.அந்தவகையில் பிரபல எழுத்தாளரான கலைமணி அளித்த பேட்டியின் மூலம் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதில்,“விஜய்க்கும் அவருடைய தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் இன்றல்ல, நீண்ட காலமாகவே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

ஏனென்றால் விஜய்க்கு படிப்பை விட நடிப்பில் அதிகம் ஆர்வம் ஏற்பட்டது. அவருடைய தந்தை எஸ்.ஏ சந்திரசேகருக்கு இது கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. அதன்பின் எஸ்.ஏ. சந்திரசேகரன், பிடிவாதமாக விஜய் நடிக்க விரும்பியதால் இரண்டு வீட்டை விற்று தான் விஜய்யை ஹீரோவாக வைத்து இரு படங்கள் எடுத்தார்.

ஆனால் அந்தப் படங்கள் படுதோல்வியடைந்தது. என்ன நடுரோட்டில் நிற்க வச்சுட்டான். அதன்பின்னர் நடிக்காத, நடிக்காதனு பெல்டால அடிச்சாலும் திருந்த மாட்டான் என்று அழாத குறையாக புலம்பினார் எஸ்.ஏ. சந்திரசேகரன்” என பிரபல எழுத்தாளர் கலைமணி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.