January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சூரரைப்போற்று படத்தின் ‘உசுரே சகியே’ பாடல் வெளியானது

சூரரைப்போற்று படத்தில் இடம்பெற்றுள்ள உசுரே சகியே என்ற பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பதினான்காம் திகதி தீபாவளி தினத்தன்று சூரரைப்போற்று படம் OTT யில் வெளியிடப்பட இருக்கிறது .அதனை முன்னிட்டு அந்த திரைப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகிறது

இன்று இறுதியாக உசுரே சகியே என்ற காதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது .நடிகர் சூரியா இந்த பாடல் தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள இந்தப் படம் பலகட்ட தாமதத்திற்குப் பின்னர் தீபாவளியன்று வெளியாகிறது.

முன்னதாக இப்படத்தின் காட்டுப் பயலே ,வெய்யோன் சில்லி, ஆகாசம் உள்ளிட்ட 3 பாடல்கள் வெளியான நிலையில், தற்போது இந்த பாடல் வெளியாகியுள்ளது.