January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“லக்‌ஷ்மி’ படத்தை பார்த்து நெகிழ்ச்சியடைந்த திருநங்கைகள்

லக்‌ஷ்மி

ராகவா லாரன்ஸ் நடிப்பில் தமிழில் வெற்றிபெற்ற, ‘காஞ்சனா’ திரைப்படத்தின், முதல் பாகத்துக்கு ஹிந்தியில் ‘லக்‌ஷ்மி’ எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. அக்‌ஷய் குமார் ஹீரோவாக நடித்துள்ளார்.

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் கடந்த வருடம் தொடங்கப்பட்ட இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து ரிலீஸூக்குத் தயாராக இருந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் அப்படம் ரிலீஸ் ஆகவில்லை.

பின்னர் இணையத்தில் இன்று இரவு 7 மணிக்கு இப்படம் வெளியாகவுள்ள நிலையில், அண்மையில் டெல்லியில் உள்ள திருநங்கை சமூகத்தினருக்காக, இத்திரைப்படத்தின் சிறப்புக்காட்சி திரையிடப்பட்டது.

அந்தச் சிறப்புக் காட்சியை பார்த்த, திருநங்கைகள் உரிமை ஆர்வலர் லக்‌ஷ்மி நாராயண் திருப்பதி, விமர்சனங்களை நிறுத்திவிட்டு, நாம் அக்‌ஷய் குமாரைப் பாராட்ட வேண்டும் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

லக்‌ஷ்மி படத்தைப் பார்த்த 60 வயது திருநங்கை கமல் குரு, “நான் இந்த திருநங்கை சமூகத்தில் பல வருடங்களாக இருக்கிறேன். இப்படத்தைப் பார்க்கையில் இரண்டு மூன்று முறை அழுதுவிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.