இந்தியாவின் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த தியேட்டர்கள் திறக்கப்பட உள்ளதாகவும் 50 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்கவுள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதற்கமைய அனைத்து திரையரங்குகளும் தற்போது புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.ஆனால் விபிஎஃப் கட்டணத்தை ரத்து செய்யாவிட்டால் தியேட்டர்களை திறந்தாலும் புதிய படங்களை வெளியிட மாட்டோம் என பாரதிராஜா அறிவித்திருப்பது புதுப் படங்கள் வெளியாவதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் பெரிய நட்சத்திரங்களின் படங்கள் தீபாவளிக்கு வெளியாகாது என்றும் தற்போதைய சூழ்நிலையில் பிஸ்கட் ,இருட்டு அறையில் முரட்டு குத்து2,எம்ஜிஆர் மகன் ,களத்தில் சந்திப்போம் ஆகிய நான்கு படங்கள் மட்டும் திரைக்கு வரத் தயாராக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு உத்தரவுப்படி நாளை திரையரங்குகள் திறக்கப்படும் எனவும் புதிய படங்கள் ஓடாவிட்டாலும் வெற்றிபெற்ற பழைய படங்கள் திரையிடப்படும் எனவும் திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விஜயின் துப்பாக்கி ,பிகில், அஜித்குமாரின் வீரம் ,விசுவாசம், தனுஷின் அசுரன் மற்றும் பரியேறும் பெருமாள், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ,உள்ளிட்ட படங்களை மீண்டும் திரையிட முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.