January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலகநாயகனின் விக்ரம் – டைட்டில் டீசர் வெளியீடு

கமல்ஹாசனின்  232 வது படமான விக்கரம் பட டைட்டில் டீசர் வெளியாகி அனைவரது எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ளது.

கமல்ஹாசனின் பிறந்த தினத்தை ரசிகர்கள் கொண்டாடும் விதமாக அவரின் விக்ரம் பட டைட்டில் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

‘ஆரம்பிக்கலாமா’ என்ற வசனத்தை தொடர்ந்து  வெளியாகியுள்ள டைட்டில் டீஸர்  டுவிட்டரில் தற்போது டிரெண்டிங் ஆகியுள்ளது.

மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன்  நடிக்கும் படம்தான் விக்ரம்.

கமல்ஹாசன்  தனது ட்விட்டர் பக்கத்தில் 232 வது பட டைட்டில் டீசர் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் .

‘அதில் ஆரம்பிக்கலாங்களா ,என் வீரமே வாகை சூடும்’ என்ற ஹாஷ் டேக்குடன் பதிவிட்டுள்ளார்.

 

விக்கரம் பட டைட்டில் டீசரை பார்த்த பல இயக்குநர்கள்,நடிகர்கள்,ரசிகர்கள் என அனைத்து தரப்பினரும் கமல்ஹாசனுக்கு வாழ்த்து மழை பொழிந்துள்ளனர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல்ஹாசனின் புதியதொரு ஆரம்பம் என்றே கூறவேண்டும்.

புதிய வடிவத்தில் புதிய கதை பாணியில் இந்த படத்தை எதிர்பார்க்கலாம் .

படத்தின் டைட்டில் டீசரை மட்டுமே எதிர்பார்த்திருந்த நிலையில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக இரண்டு நிமிடத்திற்கும் மேலாக ஒரு வீடியோவை வெளியிட்டு அசத்தி உள்ளனர் படக்குழுவினர்.

அதில் கமல்ஹாசன் சிலரை அழைத்து வாழை இலை விருந்து வைத்து அவர்களை தாக்குவது போன்ற காட்சி திகிலை ஏற்படுத்தியுள்ளது.

பட டீசரில் வரும் ஆயுதங்கள், வாழை இலை விருந்து  போன்ற இந்த இரண்டு நிமிட காட்சிகள்  ரசிகர்கள் மத்தியில் ஒரு மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது என்று தான் கூற வேண்டும்.

முன்னதாக 1986 ஆம் ஆண்டு ராஜ்கமல் தயாரிப்பில் விக்ரம் என்ற படத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.