July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரபல அழகியுடன் இணையும் முகென் ராவ்

பிக்பாஸ் புகழ் முகென் ராவ் அறிமுகமாகும் முதல் திரைப்படம் வெற்றி. இதில் பிரபல மொடல் அழகியான அனு கீர்த்திவாஸ் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் இவர் முதலிடத்தை தட்டிச் சென்றார்.திருச்சியைச் சேர்ந்த அனு கீர்த்திவாஸ்,ஒரு சிறந்த நடனக்கலைஞர் மற்றும் தடகள வீரராகவும் இருந்துவருகிறார்.

தற்போது முகென் ராவுடன் இணைந்து ஆக்ஷன் மற்றும் காதல் கதையம்சம் கொண்ட படத்தின் மூலம் திரையுலகில் காலெடியெடுத்துவைக்கிறார்.

இந்த படத்தை வெப்பம் படஇயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்குகிறார்.திரைப்படங்களில் நடிக்க உள்ளதை தொடர்ந்து அனு கீர்த்திவாஸின் அழகிய புகைப்படங்கள் வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன