
தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் ரசிகர்களின் இதயங்களை வென்று தனக்கென தனியிடம் பிடித்தவர் நடிகை ஸ்ருதிஹாசன்.
உலக நாயகன் கமல்ஹாசனின் மகளான இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தங்களது முகத்தை வேறு நபர்களின் முகத்தில் பொருத்தி வெளியிடும் செயலியை (face App) தற்போது பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.
திரைப்படங்களில் வரும் காட்சிகளுக்கு, நடிகர்கள் தங்களது முகத்தினை பொருத்தி வைத்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் 1963ஆம் ஆண்டு வெளிவந்த கிளியோபாட்ரா திரைப்படத்தின் கிளியோபாட்ராவின் முகத்திற்கு பதிலாக தனது முகத்தைப் பொருத்தி நடிகை ஸ்ருதிஹாசனும் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ வைரலாகி வருவதுடன், ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.