
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
த.செ. ஞானவேல் இயக்கத்தில் இந்த படத்தில் அமிதாப் பச்சன், ஸ்ருதி ஹாசன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்ற நிலையில் படத்தின் டீசரும் வெளியாகி கவனம் பெற்றது.
இந்தப் படம் வருகிற அக்டோபர் 10 ஆம் திகதி ஆயுத பூஜையை ஒட்டி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் வேட்டையன் படத்தின் டிரெய்லர் செவ்வாய்க்கிழமை படத் தயாரிப்பு நிறுவனத்தால் வெளியிடப்பட்டதுடன், அதனை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.