சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘வேட்டையன்’ படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
லைக்கா நிறுவனம் தயாரிப்பில், ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
அக்டோபர் 10ஆம் திகதி ‘வேட்டையன்’ திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் இடம்பெறும் ’மனசிலாயோ’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என நான்கு மொழிகளில் வெளியாகும் இப்பாடலை, ‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்ற ’ஹுகும்’ பாடலை எழுதிய சூப்பர் எழுதியுள்ளார்.