January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மிரட்டும் தனுஷ்: ‘கேப்டன் மில்லர்’ டிரெய்லர்!

நடிகர் தனுஷ் நடிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

போராட்ட கதைக் களத்தை கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் தனுஷ் இரண்டு விதமான தோற்றங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகின்றது.

டிரெய்லரில் “நீ யாரு.. உனக்கு என்ன வேணும்ங்குறதை பொறுத்து நான் யாருங்குறது மாறும்” என்ற அட்டகாசமான வசனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்த படத்தில் தனுஷுடன் பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அத்துடன் பிரியங்கா அருள் மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்

ஜனவரி 12ம் திகதி ‘கேப்டன் மில்லர்’ படம் வெளியாகவுள்ளது.