January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிவகார்த்திகேயன் இமானுக்கு செய்த துரோகம் என்ன?

நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாக இசையமைப்பாளர் டி.இமான் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த இசையமைப்பாளர் டி.இமான், நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாகவும், இந்த ஜென்மத்தில் அவருடைய படத்துக்கு இசையமைப்பது நடக்காது என்றும் கூறியிருந்தார். ஆனால் அதற்கான காரணம் எதையும் அவர் வெளிப்படையாக கூறவில்லை.

அந்த துரோகம் என்ன என்பதனை பிள்ளைகளின் எதிர்காலமம் கருதி அதனை கூறப் போவதில்லை என்றும் இமான் தெரிவிதுள்ளார்.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து இமானின் முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட் விளக்கமளித்துள்ளார்.

தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள டி.இமானின் முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட், “சிவகார்த்திகேயன் எங்களின் குடும்ப நண்பர். எங்கள் குடும்பத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்ட மனிதர். எனக்கும் இமானுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டபோது நாங்கள் பிரிந்துவிடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் எங்களுக்கு இடையே சமாதானம் செய்துவைக்க எல்லாவிதமான முயற்சிகளையும் செய்தார். இது இமானுக்கு பிடிக்கவில்லை. இதைத்தான் இமான் துரோகம் என்று சொல்கிறார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.