May 19, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரஜினியின் அடுத்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியானது!

‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தையும் சன் பிச்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது.

ரஜினிகாந்தின் 171 ஆவது படமாக அமையவுள்ள அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் 525 கோடி இந்திய ரூபாய்க்கும் மேல் வசூல் செய்ததாக படக்குழு அறிவித்திருந்து.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி, நெல்சன், அனிருத் மற்றும் ஜெயிலர் படக்குழுவினருக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் பரிசுகளை வழங்கினார்.

இந்நிலையில் தற்போது ரஜினியின் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை சன் பிச்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.