
நடிகை நயன்தாரா தற்போது அதிகாரப்பூர்வமான இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கியுள்ளதுடன், அதில் தனது குழந்தைகளுடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
நயன்தாரா- விக்னேஷ் சிவன் கடந்த வருடம் ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன.
தொடர்ந்து குழந்தைகளை கவனித்து வரும் நயன்தாரா சமூக வலைதளத்தில் நாட்டம் இல்லாமல் இருந்தார்.
இவர்களின் மகிழ்ச்சிகரமான தருணங்களை இயக்குனர் விக்னேஷ் சிவன் மட்டுமே தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து வந்தார். இந்நிலையில் நயன்தாரா தற்போது அதிகாரப்பூர்வமான இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கியுள்ளார். இதில் முதல் பதிவாக தனது குழந்தைகள் உயிர் ருத்ரோ நீல் – உலக் தெய்வக் ஆகியோருடன் இருக்கும் வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் ”நான் வந்துட்டேனு சொல்லு” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.