நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
ஆகஸ்ட் 10ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘ஜெயிலர்’ படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளதுடன், படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் இன்று மாலை திரைப்படத்தின் டிரெய்லர் படக்குழுவால் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. அதில் வெளியாகியுள்ள அதிரடிக் காட்சிகளால் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.