January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பட்டை கிளப்பும் ரஜினி பட ”ஜுஜுபி” பாடல்!

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகி இணையத்தில் பட்டை கிளப்பி வருகிறது.

படத்தின் ‘காவாலா’ மற்றும் ‘இது டைகரின் கட்டளை’ பாடல்கள் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இதனை தொடர்ந்து மூன்றாவது பாடலான “ஜுஜுபி” பாடல் புதன்கிழமை மாலை வெளியானது.

தீ, அனிருத், அனந்த கிருஷ்ணன் பாடியுள்ள இந்த பாடலை சூப்பர் சுப்பு எழுதியுள்ளார். இந்நிலையில் இந்த பாடல் யூடியூபில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.