இந்தியாவின் தமிழ்நாட்டில் படமாக்கப்பட்ட ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படம் மற்றும் தெலுங்கில் உருவான ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் இடம் பெற்ற ”நாட்டு நாட்டு” பாடல் ஆகியன திரையுலகில் மிக உயரிய விருதான ஒஸ்கார் விருதை வென்றுள்ளன.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் 95வது ஒஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இதன்போது, சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஒஸ்கார் விருதை இந்தியாவின் ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படம் வென்றது. இயக்குநர் கார்த்தி கொன்சால்வ்ஸ், தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆகியோர் விருதை பெற்றனர்.யானைகளை பராமரிக்கும் முதுமலையில் உள்ள பொம்மன் மற்றும் பெல்லி ஆகிய தம்பதி குறித்து இந்த படத்தின் கதை அமைந்துள்ளது.
அத்துடன், ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ´நாட்டு நாட்டு´ பாடலுக்கு ஒஸ்கார் விருது கிடைத்தது.