April 11, 2025 23:48:55

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”நம்ம பவர் அந்த ரகம்”: விஜய்யின் ‘வாரிசு’ டிரெய்லர்!

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இடம்பெற்றுள்ள ‘ரஞ்சிதமே’, ‘தீ தளபதி’ மற்றும் சோல் ஆஃப் வாரிசு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தற்போது ‘வாரிசு’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.