எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’ திரைப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியாகியது.
இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
போனி கபூர் தயாரித்துள்ள இந்த படம் எதிர்வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
இந்த திரைப்படத்தின் ‘சில்லா சில்லா’, காசேதான் கடவுளடா’, ‘கேங்ஸ்டா’ஆகிய பாடல்கள் அண்மையில் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு இன்று மாலை 7 மணியளவில் படக்குழு வெளியிட்டுள்ளது.
அதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருவதுடன், வெளியாகி சிறிது நேரத்தில் மில்லியன் கணக்கானோர் டிரெய்லரை பார்வையிட்டுள்ளனர்.