January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வசனம் இல்லாத மெளன படம் ‘காந்தி டாக்ஸ்’ டிரெய்லர்!

ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் நடிப்பில் வசனம் ஏதும் இல்லாமல் மெளன படமாக உருவாகியுள்ள ‘காந்தி டாக்ஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

கிஷோர் பி பெலேகர் இயக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
உலகளாவிய ஒரே மொழி இசை மட்டுமே என்பதனை அடிப்படையாகக் கெகாண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம் புதுவித அனுபவமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

‘காந்தி டாக்ஸ்’ படம் குறித்து அந்தப் படத்தின் இயக்குனர் கிஷோர் பி பெலேகர் கூறுகையில்,

”மௌன படம் என்பது வித்தையல்ல. இது கதைசொல்லின் ஒரு வடிவமே, உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில் படம் அமையும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் டிரெய்லர் மகாத்மா காந்தியின் பிறந்த நாளில் வெளியிடப்பட்டுள்ளது.

கூடிய விரைவில் படம் திரையிடப்படும் என்று தயாரிப்பு குழு அறிவித்துள்ளது.