January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொன்னியின் செல்வன் ‘சொல்’ பாடலின் லிரிக் வீடியோ!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன் -1’ திரைப்படத்தின் ‘சொல்’ பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

கல்கியின் புகழ் பெற்ற ‘பொன்னியின் செல்வன்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு தயரிக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலர் நடித்துள்ளனர்.

இரண்டு பாகங்களாக தயாரிக்கப்படும் இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்தப் படதின் டிரெய்லர் அண்மையில் வெளியாகியிருந்தது. இது ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், படத்தின் திரிஷா மற்றும் சோபிதா துலிபாலா இடம்பெற்றுள்ள ‘சொல்’ என்ற பாடலின் லிரிக் வீடியோ சமூக வலைத்தளங்களில் அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.