May 2, 2025 20:41:32

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வைரலாகும் சிவகார்த்திகேயனின் ‘பிம்பிலிக்கி பிலாப்பி’

சிவகார்த்திகேயனின் நடிப்பில் இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவாகும் ‘பிரின்ஸ்’ படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

தமன் இசையமைக்கும் ‘பிரின்ஸ்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்து வருகிறார். மேலும் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிடுவதற்கு தயாரிப்புக் குழு எதிர்பார்த்தள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகியுள்ளது.
‘பிம்பிலிக்கி பிலாப்பி’ என்ற இந்தப் பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.