April 17, 2025 4:03:22

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உருமாறி மிரட்டும் விக்ரமின் ‘கோப்ரா’ டிரெய்லர்!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘கோப்ரா’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளதுடன், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனம் சார்பில் எஸ் லலித்குமார் தயாரித்திருக்கிறார்.

கோப்ரா படம் ஆகஸ்ட் 31 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், அதன் டிரெய்லர் 25 ஆம் திகதி மாலை வெளியிடப்பட்டது.

அதிரடி காட்சிகளுடன் உருவாகியுள்ள இந்த டிரெய்லர், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.