January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சூர்யாவின் தயாரிப்பில் கார்த்தி நடித்த ‘விருமன்’ டிரைலர்!

நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் நடிகர் கார்த்தி நடித்துள்ள ‘விருமன்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

கொம்பன் படத்தை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் விருமனில் கார்த்தி நடித்துள்ளார்.

இதில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்துள்ளதுடன், இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இப்படத்திற்கு எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ள நிலையில், இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

‘விருமன்’ ஆகஸ்ட் 12ஆம் திகதி திரைக்கு வருமென்று திரைப்பட ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.