
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘வாத்தி’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இப்படத்தின் டீசர் தனுஷின் பிறந்தநாளன்று வெளியாகியுள்ள நிலையில், அவரின் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.