சூரரைப் போற்று படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது நடிகர் சூர்யாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 68 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது.
இதன்போது சூரரைப் போற்று படத்திற்கு நான்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விருது விபரங்கள்
சிறந்த படம் – சூரரைப் போற்று
சிறந்த தமிழ்ப்படம் – சிவரஞ்சனியும் சில பெண்களும்
சிறந்த நடிகர்- சூர்யா (சூரரைப் போற்று)
சிறந்த நடிகை – அபர்ணா பாலமுரளி (சூரரைப் போற்று)
சிறந்த இயக்குநர் – அய்யப்பனும் கோஷியும் இயக்குநர் சச்சி
சிறந்த அறிமுக இயக்குநர் – மடோன் அஸ்வின் (மண்டேலா)
சிறந்த துணை நடிகர் – பிஜு மேனன்
சிறந்த துணை நடிகை – லக்ஷ்மிபிரியா சந்திரமெளலி ( சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்)
சிறந்த இசையமைப்பாளர் – ஜி.வி.பிரகாஷ் (சூரரைப் போற்று), தமன் (அலவை குந்தபுரம்- தெலுங்கு)
சிறந்த திரைக்கதை – சூரரைப் போற்று ( சுதா கொங்கரா & சாலினி உஷா நாயர் )
சிறந்த வசனம் – மடோன் அஸ்வின் ( மண்டேலா )
சிறந்த படத்தொகுப்பாளர் – ஸ்ரீகர் பிரசாத் (sreekar prasad) (சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்)
சிறந்த பின்னணி இசைப் பாடகி – நஞ்சம்மா (ஐயப்பனும் கோஷியும்-மலையாளம்)
சிறந்த பின்னணி இசைப் பாடகர் – ராகுல் தேஸ்பண்டே
இந்திரா காந்தி விருது – மண்டேலா