January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வைரலாகும் தளபதியின் ‘வாரிசு’

தளபதி விஜய் இன்று தனது 48 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார்.

இந்நிலையில், அவர் நடிக்கும் 66 ஆவது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அந்தப் படத்திற்கு ‘வாரிசு’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக படக் குழு அறித்துள்ளது.

பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து, தெலுங்கு பட இயக்குனர் வம்சி படிபல்லி இயக்கும் தனது 66 ஆவது படத்தில் விஜய் நடித்து வருகின்றார்.

தளபதி 66 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்த இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எதிர்வரும் பொங்கல் பண்டிகையின் போது இதனை வெளியிட எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் செவ்வாய்க்கிழமை மாலை வெளியிடப்பட்டது.

இதில் ‘வாரிசு’ என்ற பெயரையும் படக்குழு அறிவித்துள்ளது.

பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.