April 24, 2025 5:17:55

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரஜினியின் 169வது படத்தின் பெயர் வெளியானது!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

நெல்சன் திலிப்குமாரின் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினியின் 169வது படம் உருவாகவுள்ளது.

இந்தப் படத்திற்கு “ஜெயிலர்” என்று பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் பெயருடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினியின் ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.