January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கைகோர்த்த நயன் – விக்னேஷ்: நேரில் வாழ்த்திய பிரபலங்கள்!

Photos: Twitter/ Nayanthara

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா மற்றும் நடிகரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் ஆகியோர் திருமண வாழ்வில் இணைந்தனர்.

கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்த இருவரின் திருமணம், சென்னை மகாபலிபுரத்தில் உள்ள மண்டபமொன்றில் இன்று நடைபெற்றது.

நயன்தாரா-விக்னேஷ் சிவனின் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

இவர்களது திருமண நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.

திருமண நிகழ்வு நடைபெறும் மண்டபத்திற்கு முன்னால் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.