May 14, 2025 19:43:07

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”அரசியல் விளையாட்டு நமக்கு செட்டாகாது”: ‘பீஸ்ட்’ டிரெய்லர்

விஜய் நடிப்பில் ஏப்ரல் 13 ஆம் திகதி வெளிவரவிருக்கும் ‘பீஸ்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், நெல்சன் திலிப்குமாரின் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வந்தது. இப்படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்களை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டனர். இந்தப் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் டிரெய்லரை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த டிரெய்லர் தற்போது ரசிகர்களை கவர்ந்து வந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதேவேளை டிரெய்லர் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.