July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விஜய்யின் ‘பீஸ்ட்’ படம் தொடர்பான அறிவிப்பு!

விஜய் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் ‘பீஸ்ட்’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகும் தினம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 17 ஆம் திகதி ‘பீஸ்ட்’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகிறது என்று அப்படத்தில் நடித்துள்ள ரெடின் கிங்ஸ்லி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், நெல்சன் திலிப்குமாரின் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து படத்தின் டப்பிங் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் மோஷன் போஸ்டர் தொடர்பான அறிவித்தல் தற்போது வெளியாகியுள்ளது.

https://twitter.com/RedinKingsley/status/1504010925921091584?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1504010925921091584%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fcinema.maalaimalar.com%2Fcinema%2Fcinemanews%2F2022%2F03%2F16153638%2F3582689%2FTamil-cinema-famous-actor-announced-beast-movie-update.vpf