May 16, 2025 1:36:11

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அஜித்தின் ’61’ படம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

அஜித் குமார் நடித்துள்ள ‘வலிமை’ படம் பெப்ரவரி 24 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், அவரின் அடுத்தப் படம் தொடர்பில் அறிவித்தல் வெளியாகியுள்ளது.

அஜித்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ளார்.

‘வலிமை’ படத்தை போனி கபூர் தயாரித்துள்ள நிலையில், அஜித்தின் அடுத்தப் படத்தையும் அவரே தயாரிக்கவுள்ளார்.

இதன்படி அஜித்குமாரின் 61 வது படமாக உருவாகும் புதிய படம் தொடர்பில் டுவிட்டரில் அறிவித்துள்ள போனி கபூர், கண்ணாடி அணிந்து தாடி வைத்தது போன்ற அஜித் குமாரின் கருப்பு வெள்ளை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.