October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘வலிமை’ வெளியாகும் தினம் அறிவிப்பு!

நடிகர் அஜித்தின் ‘வலிமை’ திரைப்படம் பெப்ரவரி 24 ஆம் திகதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்தின் 60வது படமான ‘வலிமை’ இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூரால் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பொலிவூட் நடிகை ஹூமா குரேஷி நடிக்க, யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஏற்கனவே‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. அதோடு படத்தின் பாடல்கள், முன்னோட்டம் ஆகியவை வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் படத்தை பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த போதும், கொவிட் பரவல் நிலைமையால் தமிழகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தமையினால் வெளியீட்டை ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலைமையில் வலிமை திரைப்படம்வரும் பெப்ரவரி 24 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என போனிகபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.