January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நடிகர் சிலம்பரசனுக்கு கௌரவ டாக்டர் பட்டம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிலம்பரசனுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகத்தினால் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

கலைத்துறையில் சாதனை படைத்த முன்னணி கலைஞர்களுக்கு முன்னணி பல்கலைக்கழகங்களினால் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவது வழமையாகும்.

அந்த வகையில் தமிழ் சினிமா துறையில் இதற்கு முன்னர் எம்.ஜீ.ஆர், சிவாஜி கணேசன், கமல்ஹாசன், விக்ரம், விஜய் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு இந்தப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 11வது பட்டமளிப்பு விழாவில், நடிகர் சிலம்பரசனுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

”நான் டாக்டர் பட்டம் பெற்றதற்கு எனது தாய், தந்தைதான் காரணம். ஒன்பது மாத குழந்தையாக இருந்த போதே என்ன நடிக்க வைத்தனர். மேலும், நான் டாக்டர் பட்டம் பெற காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவிக்கிறேன்” என்று சிலம்பரசன் ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.